அடுத்த வரவுசெலவுத்திட்டம் பெப்ரவரி, மார்ச் மாதத்தில்..
அடுத்த வருடத்திற்கான வரவுசெலவுத்திட்டம் பெப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு, பாடசாலை மாணவர்களுக்கான கொடுப்பனவுகள், வறிய மக்களுக்கான நிவாரணம் என்பனவும் அதன்போது அறிவிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
தங்காலையில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய மக்கள் சக்தியின் முதலாவது பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கவீனமுற்றோருக்கான மேலதிக கொடுப்பனவுகளை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் சில ஒப்பந்தங்களை மீளாய்வு செய்வதே திட்டமாகும். இது தொடர்பில் உரிய உடன்படிக்கைகளில் ஈடுபட்டுள்ள தரப்பினருக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.