அநநெறி பாடசாலை ஆசிரியர்களின் கொடுப்பனவு அதிகரிப்பு.
அனைத்து மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு வருடாந்த கொடுப்பனவாக ஏழாயிரத்து 500 ரூபாவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்து, பௌத்த, இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க அறநெறி பாடசாலை ஆசிரியர்களின் சேவையை பாராட்டி, அவர்களை ஊக்குவிப்பதற்காக வருடாந்தம் ஐயாயிரம் ரூபா வழங்கப்படுகிறது.
அந்த கொடுப்பனவிற்கு மேலதிகமாக 2022ஆம் ஆண்டு வரை அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது.
எனினும், அந்தத் திட்டம் தற்போது தற்போது நடைமுறையில் இல்லை. அதன்படி, விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைய, 2025ஆம் ஆண்டு முதல் அனைத்து மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு வருடாந்த ஊக்குவிப்புக் கொடுப்பனவான ஐயாயிரம் ரூபாவுடன், சீருடை கொடுப்பனவாக மேலதிகமாக இரண்டாயிரத்து 500 ரூபா வழங்கப்படும்.