Home » அயர்லாந்து சுற்றுப்பயணம்: இலங்கை மகளிர் அணியின் விபரம்

அயர்லாந்து சுற்றுப்பயணம்: இலங்கை மகளிர் அணியின் விபரம்

Source

அயர்லாந்து சுற்றுப்பயணத்தில் பங்கேற்கும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.  அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் இதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

அந்த அணிக்கு சமரி அத்தபத்து தலைமை தாங்குகிறார். இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி எதிர்வரும் 6ஆம் திகதி அயர்லாந்து செல்லவுள்ளது.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ரி-20 கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 11ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதேவேளை, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் வழிகாட்டலில் மாபெரும் தேசிய மோட்டார் சைக்கிள் ஓட்டப் போட்டி இடம்பெறவுள்ளது.

புத்தளம் கல்பிட்டி பிரதேசத்தில் போட்டி இடம்பெறும். இதனை இலங்கை மோட்டார் சைக்கிள் விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

அல்ஹாஜ் தாரிக் தலைமையில் போட்டி நாளை ஆரம்பமாகும். இதற்கான அனுசரணையை ரேஸ் கிளப் வழங்கியுள்ளது.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image