அருண தர்ஷன ஒலிம்பிக் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு தெரிவாகியுள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆடவருக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அருண தர்ஷனா அரையிறுதிக்குத் தகுதி பெற முடிந்தது.
அருண பங்கேற்ற போட்டி உள்நாட்டு நேரப்படி நேற்றிரவு இரவு 11.15ற்கு நடைபெற்றது. அவர் 44 தசம் 9-9 செக்கன்களில் பந்தயத்தை முடித்து மூன்றாவது இடத்தைப் பெற்றுக் கொண்டார். இது அவரின் சிறந்த தனிப்பட்ட பெறுபேறாகும்.
சுகத் திலகரத்னவிற்கு பின்னர் இந்தப் போட்டித் தூரத்தை 45 செக்கன்களுக்கு குறைவான காலத்திற்குள் நிறைவு செய்த நாட்டின் முதலாவது வீரராக அருண தர்ஷன பதிவாகியுள்ளார்.
இந்தப் போட்டியின் இறுதிச் சுற்று எதிர்வரும் ஆறாம் திகதி இலங்கை நேரப்படி இரவு 11 மணிக்கு இடம்பெறவுள்ளது.
நேற்று இடம்பெற்ற இந்தப் போட்டியில் முதலாவது இடத்தை வெனடாவின் கிரானி ஜேம்ஸ் பெற்றுக்கொண்டார்.
அவர் 44 தசம் 7-8 செக்கன்களில் போட்டித் தூரத்தை நிறைவு செய்தார். கனடாவின் கிறிஸ்தோபர் மொராலெஸ் 44 தசம் 9-6 செக்கன்களில் போட்டித் தொடரை நிறைவு செய்து, இரண்டாம் இடத்தைப் பெற்றார்.
இலங்கை வீரர் ஒருவர் இவ்வாறான திறமையை வெளிப்படுத்துவது 28 வருடங்களுக்கு பின்னர் என்பது குறிப்பிடத்தக்கது.