அறிக்கையிடல் பற்றி ஊடகவியலாளர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.
ஊடகவியலாளர்கள் தமது கடமைகளை நிறைவேற்றுவதுடன், அறிக்கையிடல் தொடர்பில் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என புத்தசாசனம் சமயம் மற்றும் கலாசார அலுவல்கள், சமூகப் பாதுகாப்பு மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
சிறந்த ஊடகவியலாளர்களை உருவாக்குவதற்கு முன்னர் சிறந்த பிரஜைகளை உருவாக்குவது முக்கியம் என்றும் அவர் கூறினார்.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தற்போது கொழும்பில் நடத்திக் கொண்டிருக்கும் சிறுவர் நேய அறிக்கையிடல் சம்பந்தமான செயலமர்வில் பங்கேற்றபோதே அவர் இதனைக் கூறினார்.
இந்த நிகழ்வில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி உதித கயாஷான் குணவர்தனவும் பங்கேற்றார்.
ஊடகவியலாளர்களின் ஊடக பிரவேசம் உரிய கட்டமைப்பின் பிரகாரம் அமைய வேண்டும் என அவர் கூறினார். மக்கள் மயப்படுத்தும் தகவல்கள் சரியானதாக இருக்க வேண்டும்.
அவ்வாறு இல்லவிடின், நாடு நெருக்கடியை எதிர்கொள்ளும் என்றும் அவர் கூறினார். இதன் காரணமாக பொறுப்புக் கூறும் நிலையினை ஊடகங்களில் ஏற்படுத்த வேண்டும் என்றும் கலாநிதி உதித்த கயாஷான் தெரிவித்தார்.
சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் போது, ஊடகவியலாளர்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் திட்டமிடல் மற்றும் தகவல் பிரிவின் பணிப்பாளர் ஷானிக்கா மலல்;லகொட இதன்போது தெரிவித்தார்.