Home » ஆசிய சம்பியன் சுற்றுத்தொடரில் இலங்கை பங்கேற்கும் போட்டி இன்று

ஆசிய சம்பியன் சுற்றுத்தொடரில் இலங்கை பங்கேற்கும் போட்டி இன்று

Source

ஆசிய வெற்றிக் கிண்ணத்திற்கான வளர்ந்து வரும் அணிக்களுக்கு இடையிலான ரி-ருவென்டி கிரிக்கெட் சுற்றுத்தொடரின் போட்டியொன்றில் இன்று இலங்கை ஏ அணி பங்கேற்கிறது.

இந்த சுற்றுத்தொடர் ஓமானில் நடைபெறுகிறது. இதன் பத்தாவது போட்டியில் இலங்கை ஏ அணி பங்களாதேஷ் ஏ அணியை சந்திக்கும். இந்தப் போட்டி இலங்கை நேரப்படி இரவு 7.30இற்கு ஆரம்பமாகும்.

நேற்றைய போட்டி ஒன்றில் ஓமானை எதிர்கொண்ட பாகிஸ்தான் ஷஹிஸ் அணி 74 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

மற்றைய போட்டியில் ஐக்கிய அரபு எமிரேஸ் அணியை எதிர்கொண்ட இந்திய ஏ அணி ஏழு விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image