Home » இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இலங்கை அணி திறமையை வெளிப்படுத்தும் .

இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இலங்கை அணி திறமையை வெளிப்படுத்தும் .

Source

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் அனைத்து வீரர்களும் தமது அதிகபட்ச திறமையை வெளிப்படுத்துவார்கள் என நம்புவதாக, அணியின் பதில் பயிற்றுவிப்பாளர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

சுற்றுத்தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் இன்று இங்கிலாந்து நோக்கி பயணமாகி உள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்வதற்கு, முன்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் பயிற்றுவிப்பாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் வீரர்களுக்கு அதிகபட்ச ஆதரவை வழங்குமாறு ரசிகர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்காலிக பயிற்சியாளராக இங்கிலாந்து சுற்றுப்பயணம் தனது இறுதி சுற்றுப்பயணம் என்றும்,

முடிந்தவரை போட்டியை சிறப்பாக முடிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஜயசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image