எமது கடல் எல்லைக்குள்
புகுந்து வயிற்றில் அடிக்கும் செயலில் ஈடுபடாதீர்கள் என தமிழக மீனவர்களிடம் பருத்தித்துறை மீனவ சங்கத் தலைவர்
பிரான்சிஸ் இரட்ணகுமார் கோரிக்கை விடுத்தார்.
இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய சமயம் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டு மயிலிட்டித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட 16 மீனவர்களைச்சந்தித்தே இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.
எமது உறவுகள், எமது மக்கள் எனக் கூறிக்கொண்டு எமது வாழ்வாதாரத்தை அழிக்கும் செயலினையே இன்று தமிழ்நாடு மீனவர்கள் மேற்கொள்கின்றீர்கள் கரையில் இருந்து 2 அல்லது 3 கிலோ மீற்றர் வரையில் உங்களது இராட்சத படகுகள் வந்து அடித்துச் செல்கின்றன.
இங்கிருந்து தப்பி போனால் எல்லையில் பிடிப்பதாக கூறுகின்றீர்கள் உங்களை எங்கள் கடற்படையும் பிடிப்பதாக தெரியவில்லை. அவ்வாறானால் நாம் எவ்வாறு தொழிலில் ஈடுபடுவது.
இரண்டு அல்லது 3 மாநங்களிற்கு ஒரு தடவைதான் கடற்படை இந்திய மீனவர்களை மிடிக்பின்றது ஆனால் தினமும் பிடிக்க வேண்டும். எமது சொத்துக்களை சூறையாடிச் செல்கின்றீர்கள், வலைகளை நாசம் செய்கின்றீர்கள் இதனைக் கேட்டால் தொப்புள்கொடி உறவுகள் என்பீர்கள்.
அந்த தொப்புள்கொடியினையே அடுத்து விட்டாச்சு நீங்கள் எங்கள் கடலிற்குள் வராமல் விடுவதுதான் எமக்குச் செய்யும் பெரிய உதவி அல்லது தினமும் பிடிக்குமாறு கடற்படைக்கு நாம் அழுத்தம் கொடுப்போம் என்றார்.
TL