இலங்கை – இஸ்ரேல் இடையிலான விமானப் போக்குவரத்து ரத்து.
இலங்கைக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான விமானப் போக்குவரத்து எதிர்வரும் திங்கட்கிழமை வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.
இஸ்ரேலின் பிரதான விமான நிலையத்தின் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமை இதற்கான காரணமாகும்.
எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னர் இஸ்ரேல் செல்லத் திட்டமிட்டிருந்தவர்கள் உரிய பயணத்தை வேறொரு தினத்திற்கு மாற்றிக் கொள்ளுமாறு இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
ஈரான், ஹிஸ்புல்லா, ஹமாஸ் என்பனவற்றின் தாக்குதல்களினால் இலங்கையர்களுக்கு குறிப்பிடத்தக்க பாதிப்புக்கள் ஏற்படவில்லை.
இஸ்ரேலில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு ஆபத்தாhன நிலை ஏற்படுமாயின், அதற்குத் தேவையான தீர்வுகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மீதான தாக்குதல்கள் அதிகரிக்குமாயின், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான நிலக்கீழ் வைத்தியசாலைகளும், வைத்திய முகாம்களும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.
இஸ்ரேலிலும், லெபனானிலும் தற்சமயம் 20 ஆயிரத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் பணியாற்றுகிறார்கள். இதில் 12 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இஸ்ரேலில் பணியாற்றி வருகிறார்கள்.
இஸ்ரேல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து புகலிடம் கோரிய 28 இலங்கையர்கள் தற்சமயம் பாதுகாப்பு மத்திய நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.