Home » இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் நவராத்திரி விழா இன்று

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் நவராத்திரி விழா இன்று

Source

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச்சேவை ஏற்பாடு செய்துள்ள நவராத்திரி விழா இன்று நடைபெறவுள்ளது. கூட்டுத்தாபனத்தின் குமாரதுங்க முனிதாச கலையரங்கில் முற்பகல் 10.30ற்கு நிகழ்வுகள் ஆரம்பமாகும்.

தமிழ் சேவைப் பணிப்பாளர் ஆர்.கணபதிப்பிள்ளை தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி உதித்த கயாஷான், பணிப்பாளர் நாயகம் தம்மிந்த குமார ஆகியோர் பங்கேற்பார்கள்.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் வை.அனிருத்தனன், பொறியியலாளர் சண். குகவரதன், உளவியல் நிபுணர் கே. ஹாகாஷ் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொள்வர்.

தெகிவளை ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலய குருக்கள் உதயகுமார் ஷர்மா பூஜை வழிபாடுகளை நடத்துவார். இந்த விழாவில் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற்படவுள்ளன.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image