இலங்கை வானொலியின் சிரேஷ்ட அறிவிப்பாளர் சுஜிவ ஹரிசந்திர காலமானார்.
இலங்கை ஒலிப்ரப்பு கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அறிவிப்பாளர் சுஜிவ ஹரிசந்திர இன்று காலமானார்.
அன்னாரது பூதவுடல் நாளை மறுதினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன வளாகத்திற்கு கொண்டு வரப்படும்.
திரு. சுஜீவ ஹரிசந்திர பல நிகழ்ச்சிகளில் அறிவிப்பு செய்து பாராட்டுப் பெற்றுள்ளார். பல தேசிய விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.
அவரது குரல், அறிவிப்புத்திறன், இலங்கை வாழ் மக்கள் மத்தியில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. அவரது செய்தி வாசித்தல் மக்கள் மத்தியில் மிகச்சிறந்த புகழை பெற்றுக்கொண்டுத்துள்ளது. அவர் இறக்கும் போது அவருக்கு வயது 59.