Home » இலங்கையில் தொடரும் துப்பாக்கிச் சூடு, மேலும் ஒருவர் சுட்டுக் கொலை!

இலங்கையில் தொடரும் துப்பாக்கிச் சூடு, மேலும் ஒருவர் சுட்டுக் கொலை!

Source

கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவேந்திரமுனை பகுதியில் உள்ள ஒரு சுப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 

காயமடைந்த நபர் சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கார் ஒன்றில் வந்த குழுவினரே இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இரண்டு நபர்களினால் 9 மி.மீ ரகத்தைச் சேர்ந்த இரண்டு துப்பாக்கிகள் மூலம் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் ‘டிலைட்’ என்று அழைக்கப்படும் 55 வயது மீன் வியாபாரி என்று கூறப்படுகிறது. 

இந்த நபர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிப்பதுடன், சம்பவம் குறித்து பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

The post இலங்கையில் தொடரும் துப்பாக்கிச் சூடு, மேலும் ஒருவர் சுட்டுக் கொலை! appeared first on LNW Tamil.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image