இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் செயற்திட்டம் தொடர்பில் பொதுமக்களின் ஆலோசனைகள் கோரப்படவுள்ளன.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் 2025-2029 செயல்திட்டம் தொடர்பாக, பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளப்படவுள்ளன.
இது மாகாண மட்டத்தில் செயல்படுத்தப்படும். அதன்போது சட்டச் சிக்கல்கள் விசாரணைகள் முறைப்பாடுகளைப் பெறுதல் போன்ற விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.
அரச அதிகாரிகள் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் புத்திஜீவிகள் மற்றும் மக்களிடம் இருந்து அதற்கான யோசனைகள் மற்றும் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் மத்திய மாகாண வேலைத்திட்டம் நேற்று நடைபெற்றது. வடமேல் மாகாணத்தில் இத்திட்டம் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் உதவிப் பணிப்பாளர் தனுஜா பண்டார இன்று காலை தேசிய வானொலியில் இடம்பெற்ற சுபாரதி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இதனைத் தெரிவித்தார்.
தற்போதுள்ள மூன்று சட்டங்களை இணைத்து ஊழல் தடுப்புச் சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.