இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் 30 பாலஸ்தீனியர்கள் பலி.
காசாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணிநேரத்தில் இஸ்ரேலினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 30ற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
அத்துடன் ஆக்கிரமிப்புக்குள்ளான மேற்குக் கரையுடன் ஜோர்டானின் எல்லைப்பகுதிக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பொதுமக்கள் மூவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே காஸாவில் எஞ்சியுள்ள பணயக்கைதிகளை விடுவிப்பதற்குப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹ_ தலைமையிலான அரசாங்கம் ஒப்பந்தமொன்றினை கைச்சாத்திட வேண்டும் எனக்கோரி இஸ்ரேலில் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் இஸ்ரேலியர்கள் வீதிகளில் இறங்கி இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.