ஈரான் – ரஷ்ய ஜனாதிபதிகளுக்கு இடையில் சந்திப்பு.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், ஈரான் ஜனாதிபதி மசூத் பெஸெஷ்கியானை (Masoud Pezeshkian) சந்தித்துள்ளார்.
ஈரான் ஜனாதிபதி மசூத் பெஸெஷ்கியான ஜனாதிபதி பதவியேற்ற பின்னர் ரஷ்ய ஜனாதிபதியை சந்திப்பது இதுவே முதல் தடவையாகும்.
ஈரான், லெபனான், மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு இஸ்ரேலில் இருந்து விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து இரு தலைவர்களும் அதன்போது கலந்துரையாடியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.