உலக தபால் தினம் இன்றாகும்.
உலக தபால் தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. 1969ஆம் ஆண்டில் ஜப்பானின் ரோக்கியோ நகரில் இடம்பெற்ற உலக தபால் சங்கத்தின் வருடாந்தக் கூட்டத்தின்போது இதுதொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.
சுவிற்சர்லாந்தின் பேர்ன் நகரில் 1874ஆம் ஆண்டில் உலக தபால் சங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. சங்கம் ஸ்தாபிக்கப்பட்டு, தற்சமயம் 150 ஆண்டுகள் பூர்த்தியாகின்றமை சிறப்பம்சமாகும்.
உலகில் முதலாவது தபால் ஆவணம் கிறிஸ்துவிற்கு முன் 225ஆம் ஆண்டில் முதற்தடவையாக பயன்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது. உருவப் படத்துடன் கூடிய முத்திரை 1848ஆம் ஆண்டில் முதற்தடவையாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.
இலங்கையின் ஆளுனராகப் பணியாற்றிய ப்ரட்றிக் நோர்த்தின் நிர்வாகத்தில் 1798ஆம் ஆண்டில் இலங்கையில் தபால் சேவை ஆரம்பிக்கப்பட்டது.
கொழும்பு, காலி, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் தபால் அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட்டன. பிரித்தானியாவின் விக்டோறியா மகாராணியாரின் உருவப்படம் பொறிக்கப்பட்ட முதலாவது முத்திரை இலங்கையில் 1857ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
உலக தபால் தினத்தை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்டுள்ள விசேட நிகழ்வு அலரிமாளிகையில் இன்று முற்பகல் இடம்பெறவுள்ளது.
பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, அமைச்சர் விஜித்த ஹேரத் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளார்கள்.