உலகளாவிய ரீதியில் இலங்கை ரூபா தொடர்பில் நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். டொலரின் பெறுமானம் வீழ்ச்சி அடைவதனால் கூடுதலானோர் தற்போது டொலரை ரூபாவாக மாற்றிக்னொண்டிருக்கிறார்கள். மக்கள் விடுதலை முன்னனி போன்ற கட்சிகளுக்கு பொருளாதார விடயம் தொடர்பில் தெளிவு இல்லை. உள்ளுராட்சி மன்றத்தையேனும் நடத்திச் செல்ல முடியாத இவ்வாறான கட்சிகள் முன்வைக்கும் கருத்துக்கள் சிக்கலுக்கு உரியவை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.