உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இந்த வருட இலக்கு இரண்டாயிரத்து 24 பில்லியன் ரூபாய்
இந்த வருடம் இரண்டாயிரத்து 24 பில்லியன் ரூபா வருமானம் எதிர்பார்க்கப்படுவதாக உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகம் சமன் சாந்த தெரிவித்துள்ளார்.
அதன்படி, இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 40 சதவீத வருமானம் இலக்கு வைக்கப்பட்டது. எஞ்சியுள்ள ஆறு மாதங்களில் 60 சதவீத வருமானத்தைப் பெற்றுக் கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனர்த்த முகாமைத்துவ பிரிவை நிறுவுவதன் மூலம் வரி வருமான செயல்முறையை முறையாகவும் முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தொடர்பான இடைநிறுத்தப்பட்ட வரி வருமானமாக ஆயிரத்து 66 பில்லியன் ரூபா உள்ளது.
இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 2023ஆம் ஆண்டு நான்கரை லட்சமாக இருந்த வரிக் கோப்புகளின் எண்ணிக்கை தற்போது பதினொரு லட்சமாக மாறியுள்ளது.
இந்த வருடம் வுஐN இலக்கங்களை பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 47 இலட்சம் என அவர் குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் மாறுவேடத்தில் நிறுவனங்களுக்குச் சென்று வரி வசூலிப்பதாக சில சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன.
ஆனால், அந்த திணைக்கள அதிகாரிகள் எந்த சூழ்நிலையிலும் நிறுவனங்களுக்கு சென்று வரி வசூலிப்பதில்லை என சமன் சாந்தா வலியுறுத்தியுள்ளார்.