ஊழலுக்கு எதிரான புதிய சட்டமூலத்தை விரைவில் கொண்டு வர அரசாங்கம் திட்டம்
ஊழலுக்கு எதிரான புதிய சட்டமூலமொன்றை விரைவில் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவை இல்லாதொழித்து, பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூறும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவை நிறுவுவதே இதன் நோக்கமாகும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 2004ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் கையெப்பம் இடப்பட்ட கொள்கைக்கு அமைய இந்த புதிய மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
அதன்படி, முறைப்பாடு இல்லாவிட்டாலும் ஊழலை விசாரிக்க ஆணைக்குழுவிற்கு அதிகாரம் வழங்க வேண்டும்.
லஞ்சம் மற்றும் ஊழலுக்கான தண்டனைகளை வலுப்படுத்துதல், ஆணைக்குழுவிற்கு நிதி சுதந்திரம் வழங்குதல், அரசியல் தலையீடுகளுக்கு எதிரான சட்டத்தை வலுப்படுத்துதல் போன்றவை இதன் கீழ் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த சட்டமூலத்தின் இறுதி வரைவு விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.