ஊழல் – மோசடியை இல்லாதொழிக்கும் வேலைத் திட்டத்திற்கு ஜப்பான் – தென்கொரியா ஆதரவு.
தற்போதைய அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மையான வேலைத்திட்டத்திற்கு கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்துள்ளது.
முகவர் நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்று ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியது.
அதன்போது இந்த இணக்கப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் மோசடிகளுக்கு எதிரான வேலைத்திட்டங்களுக்கு கடன் உதவி வழங்குவதற்கு கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவரகம் இணக்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் தேவைக்கு ஏற்ப, கடன் உதவிகளை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தவுள்ளதாக அந்த நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதி செயலாளரிடம் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை ஜப்பானும் இலங்கை அரசாங்கத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக அறிவித்துள்ளது.