Home » ‘எனது பெயரை நான் மாற்றவில்லை’

‘எனது பெயரை நான் மாற்றவில்லை’

Source

‘எனது பெயரை நான் மாற்றவில்லை’ என்று தெரிவித்து, இலங்கையின் ‘நியூஸ்வயர்’ செய்தி நிறுவனத்துக்கு, இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன – தனது பெயரை ‘ஹர்ஜன் அலெக்சாண்டர்’ என மாற்றிக் கொண்டுள்ளார் என, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்றைய திகதியிட்டு (ஓகஸ்ட் 30) நியூஸ்வயர் செய்தி நிறுவனத்துக்கு கடிதமொன்றை, அர்ஜுன மகேந்திரன் அனுப்பியுள்ளார் என, அந்த செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

அந்தத் கடிதத்தில், தனது பெயரை மாற்றியுள்ளதாக அமைச்சர் தெரிவித்த தகவலை அர்ஜுன மகேந்திரன் நிராகரித்துள்ளார்.

மேலும், அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் ‘லக்ஷ்மன் அர்ஜுன மகேந்திரன்’ என்ற பெயரில் கையொப்பமிட்டு, சிங்கப்பூர் முகவரியையும் வழங்கியுள்ளார் என, நியூஸ்வயர் வெளிளிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ‘எனது பெயரை நான் மாற்றவில்லை’ appeared first on LNW Tamil.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both