எம்.பி ஒருவருக்கு எவ்வளவு சம்பளம்?
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சம்பளம் அல்ல கொடுப்பனவே வழங்கப்படுவதாக இலங்கை பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.
தற்போது ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு சம்பளமாக ரூ.54,000 வழங்கப்படுகிறது. இதற்கு மேலதிகமாக அலுவலக மற்றும் ஊழியர்களுக்கான கொடுப்பனவு, தொலைபேசி கொடுப்பனவு என சில கொடுப்பனவுகளும் வழங்னக்கடும்.
இது தவிர, நாடாளுமன்றக் கூட்டங்கள் நடைபெறும் நாட்களில் வருகைப் படியாக ரூ.2,500 மற்றும் கூட்டத்தொடர் இல்லாத நாட்களில் செயற்குழு விவகாரங்களில் கலந்து கொள்வதற்கு ரூ.2,500 உதவித்தொகையாக வழங்கப்படும்.
எரிபொருள் கொடுப்பனவு தூரத்தை அடிப்படையாகக் கொண்டது ஒரு சூத்திரத்தின்படி கணக்கிடப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், நாடாளுமன்றத்தில் இருந்து 40 கிலோ மீட்டருக்குள் வீடு இல்லாதவர்கள் விண்ணப்பித்து மாதிவெல குடியிருப்பில் வீடு ஒன்றினை பெற்றுக் கொள்ளலாம்.
மாதிவெலவில் இவ்வாறான 108 வீடுகள் உள்ளன. ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரின் வேண்டுகோளுக்கு இணங்க முதலில் கோரிக்கைகள் முன்வைக்கப்படும் வரிசையில் வீடுகள் வழங்கப்படும்.
மேலும், வீட்டு வாடகையாக 2,000 ரூபாய் அறவிடப்படும் என்பதுடன், மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணத்தை சம்பந்தப்பட்ட உறுப்பினர் செலுத்த வேண்டும்.