எரிபொருள் விநியோகிக்கும் போது QR குறியீட்டு முறையை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
“யுத்த நிலைமை இன்னும் முடிவடையவில்லை. ஹோர்முஸ் நீரிணையைச் சுற்றி பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. எண்ணெய் பீப்பாயின் விலை சில நேரங்களில் அதிகரிக்கிறது, சில நேரங்களில் குறைகிறது. எரிபொருள் நெருக்கடி இன்னும் தீர்க்கப்படவில்லை.
ஒரு நாடாக, மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் நிலைமையை அதிகபட்சமாக நிர்வகிப்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நான் ஏற்கனவே கூறியிருந்தேன். எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டும் QR குறியீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டும், டீசல் நுகர்வு 10% மட்டுமே குறைந்துள்ளது. பெட்ரோல் நுகர்வு 9% மட்டுமே குறைந்துள்ளது.
அத்தியாவசிய தேவைகளுக்கான பிரிவுகளுக்கு எரிபொருள் வழங்கப்பட்டு வருகிறது. இன்னும் சிறிது காலத்திற்கு இந்த முறையை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டியிருக்கும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவிக்கும் என நான் நினைக்கிறேன்” என அமைச்சர் தெரிவித்தார்.
நளிந்த ஜயதிஸ்ஸ அமைச்சர் இந்தக் கருத்தை நேற்று (25) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது தெரிவித்தார்.
The post எரிபொருள் QR குறியீட்டு முறை தொடர்ந்து அமுலில் appeared first on LNW Tamil.