ஐக்கிய மக்கள் சக்தியினால் நாட்டை ஒன்றிணைக்க முடியும் – சஜித் பிரேமதாச.
கொவிட் காலப்பகுதியில் முஸ்லிம் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதில் பிரச்சினை ஏற்பட்ட போது, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமுல்படுத்திய கொள்கையினால் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
குறித்த சந்தர்ப்பத்தில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவோ, அனுர குமார திஸாநாயக்கவோ முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுக்கவில்லையென சஜித் பிரேமதாச கூறினார்.
எனினும் ஐக்கிய மக்கள் சக்தி அந்தத் தீர்மானத்திற்கு எதிராக குரல் கொடுத்ததாகவும் அவர் தெரிவித்தார். நிந்தவூர் பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போதே எதிர்க்கட்சித் தலைவர் இந்த விடயத்தைத் தெரிவித்தார்.