கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்படும்.
கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. நாட்டின் கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்கும் இந்திய மீனவர்களையும், சட்டவிரோத நடவடிக்கைகளையும் தடுப்பதே இதன் நோக்கமாகும்.
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தில் இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த 333 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட கப்பல்களின் எண்ணிக்கை 45 ஆகும்.
எனவே, கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கடற்படை சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, இந்திய கடற்படையின் முதன்மை போர்க்கப்பலான ஐ.என்.எஸ்-மும்பை என்ற கப்பல், மூன்று-நாள் சுற்றுலா பயணத்தை மேற்கொண்டு நாளை இலங்கைக்கு வரவுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.