கடவுச்சீட்டுக்களை நிகழ்நிலை ஊடாக வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்.
வெளிநாட்டுக் கடவுச்சீட்டுக்களை நிகழ்நிலை ஊடாக பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என்று குடிவரவு குடியகல்வு திணைக்கள பதில் கட்டுப்பாட்டாளர் நிலூஷா பாலசூரிய தெரிவித்துள்ளார்.
திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குச் சென்று கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்கான தினத்தை ஒதுக்கிக்கொள்ள முடியும்.
நிகழ்நிலை மூலம் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்கான தினமொன்றை ஒதுக்கிக்கொள்ள எதிர்பார்த்திருப்பவர்கள் திணைக்களத்தில் காத்திருக்க வேண்டிய தேவை இல்லையென்றும் அவர் கூறினார்.
கணனி அல்லது கைத்தொலைபேசி மூலம் இதற்கான தினத்தை ஒதுக்கிக்கொள்ள முடியும்.
கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்கான நாளொன்றை ஒதுக்கிக்கொள்ள எவருக்கும் பணத்தையோ கட்டணங்களையோ செலுத்த வேண்டாம் என்றும் குடிவரவு குடியகல்வு திணைக்கள பதில் கட்டுப்பாட்டாளர் நிலூஷா பாலசூரிய மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.