கட்சி தாவுவர்களுக்கு எதிராக சட்டமூலம் நிறைவேற்றப்படும் – அனுரகுமார
எதிர்காலத்தில் ஆட்சிக்கு வரவுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக ஜனாதிபதி மற்றும் பிரதி அமைச்சர்களின் சிறப்புரிமைகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அழகிய நாடு வளமான நாளை எனும் தொனிப்பொருளில் கேகாலை இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் தமது கட்சி டீல் செய்து கொண்டுள்ளதாக தெரிவித்தாலும், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலேயே டீல் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு அரசியல் முரண்பட்ட சித்தாந்தங்களையும் இனவாதத்தையும் உருவாக்கி வரும் அனைத்து அரசியல்வாதிகளும் சஜித் பிரேமதாசவுடன் இணைந்துள்ளதாகவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.
தமது அரசாங்கத்தின் கீழ் பொலிஸாருக்கு அரசியல் தலையீடுகள் இன்றி செயற்பட வாய்ப்பு வழங்கப்படும். தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மட்டுமே பதவி உயர்வு வழங்கப்படும்.
தமது அரசாங்கத்தின் கீழ் கட்சி தாவும் அரசியல்வாதிகளுக்கு எதிராக பாராளுமன்றத்தில் சட்டமூலம் நிறைவேற்றப்படும் எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.