மது விற்பனை நிலையங்கள் திறக்கும் நேரம் திருத்தியமைக்கப்பட உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கலந்துரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், மதுபானம் தொடர்பில் நாட்டில் உள்ள சில சட்டங்களும் சட்டவிரோத மதுபானத்திற்கு மக்களைத் தூண்டுவதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை கலால் உத்தியோகத்தர் சங்கத்தின் 23 ஆவது வருடாந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத மதுபானத்தின் வளர்ச்சி குறித்து கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், 20 வருடங்களில் சட்டப்பூர்வ மதுபானம் 50% வளர்ச்சியடைந்துள்ள நிலையில், சட்டவிரோத மதுபானத்தின் வளர்ச்சி 500% அதிகமாகும். இந்த நிலைமையை அடக்குவதற்கு மதுபான சாலை விரிவாக்கமும் ஒரு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டி மாவட்டத்தில் 6,000 பேருக்கு ஒரு மதுபானக் கடை உள்ள நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் 9,90,000 பேருக்கு ஒரு மதுபானக் கடை இருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மதுக்கடைகளை இரவு 9:00 மணி முதல் சிறிது நேரம் திறக்க ஏற்பாடு செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.