கனடாவில் 6 பேர் படுகொலை – சந்தேகநபருக்கு தொடர்ந்து விளக்கமறியல்!
கனடாவில், ஒட்டாவாவில் 6 இலங்கையர்கள் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று (14) நடைபெற்றது.
பெப்ரியோ டி சொய்சா என்ற 19 வயதுடைய இலங்கை மாணவன் ஒருவரே தற்போது கொலைகள் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் அவர் நேற்று (14) விசாரணைகளுக்காக நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் எதிர்வரும் 28 ஆம் திகதி மீண்டும் வழக்கு விசாரணை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டது.