காசாவில் போர் நிறுத்தத்தை மேற்கொள்ளுமாறு அமெரிக்க ஜனாதிபதி கோரிக்கை.
காசாவிற்கு எதிரான யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இஸ்ரேல் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
லெபனானில் போர் நிறுத்தத்தை மேற்கொள்வதற்கான சாத்தியங்கள் காணப்பட்டாலும் காசாவின் மீது இஸ்ரேல் மேற்கொள்ளும் அத்துமீறல்களால் உரிய இலக்குகளை அடைந்துகொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடையாது என்றும் அவர் கூறினார்.
ஐரோப்பாவிற்கான விஜயத்தின்போது அவர் இது பற்றிக் கருத்து வெளியிட்டார். ஹமாஸ் அமைப்பின் தலைவராகப் பணியாற்றிய யகியா சின்வார் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதியின் அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.