“காஸா பகுதி தொடர்பில் இலங்கை எப்போதும் சரியான நிலைப்பாட்டை எடுக்கும்”
காஸா பகுதியில் மோதல்கள் தொடர்ந்தும் அதிகரித்தால், இந்நாட்டிலுள்ள 85 வீதமான வெளிநாட்டு பணியாளர்கள் பாதிக்கப்படலாம் என வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் எரிபொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு ஒளிபரப்பான தனியார் வானொலி ஒன்றினது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, காஸா பகுதி தொடர்பில் இலங்கை எப்போதும் சரியான நிலைப்பாட்டை எடுக்க முயற்சிப்பதாக தெரிவித்தார்.