பலஸ்தீனின் காஸா பிரதேசத்தின் மீது, இஸ்ரேல் குண்டுத் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது. பலஸ்தீனின் ஆட்புலத்திலிருந்து, இஸ்ரேலின் நிலப்பரப்புக்கள் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களை அடுத்து, இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மத்திய கிழக்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் நப்லுஸ் பிரதேசத்தில், இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களினால் 11 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இருதரப்புக்கும் இடையிலான மோதல்கள் வலுவடைந்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.