காஸாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 34 பேர் பலி.
காஸாவில் இஸ்ரேல் படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் 34 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ஐக்கிய நாடுகள் சபையின் ஆறு ஊழியர்களும் அடங்குகின்றனர்.
இந்தத் தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் அவர் தனது அதிருப்தியை வெளியிட்டிருக்கிறார்.
காஸாவில் இஸ்ரேல் நடத்தும் அட்டூழியங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்;. இஸ்ரேலுக்கும் – ஹமாஸ் அமைப்பிற்கும் இடையிலான போரில் இதுவரை 41 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.