இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ். ட்ஜகார்யனுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது.
திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்திற்கு மரியாதை நிமித்தம் வருகை தந்த ரஷ்ய தூதுவருடன் கிழக்கு மாகாணத்தின் சமீபத்திய அபிவிருத்திகள் குறித்தும் ரஷ்ய நாட்டு சுற்றுலா பயணிகளை கிழக்கு மாகாணத்திற்கு கவர்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.