கிழக்கு மாகாண அபிவிருத்தி திட்டங்களை துரிதப்படுத்த நடவடிக்கை
2035ஆம் ஆண்டு அளவில் இலங்கையை ஏற்றுமதி பொருளாதார நாடாக மாற்றியமைப்பதே பிரதான நோக்கம் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுடன் இலங்கையில் முக்கிய பேச்சுவார்தைகள் இடம்பெற்றன.
இலங்கைக்கான மூன்றாம் தவணை கடன் உதவியை வழங்கும் நோக்கில் பொருளாதார முன்னேற்ற மீளாய்வு பணிகளை மேற்கொள்வதற்காக சர்வதேச நாணய நிதிய குழுவினர் இலங்கை வந்துள்ளனர்.
மட்டகளப்பு மாவட்டத்தின் தொழில் நிபுணர்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர் மற்றும் சட்டத்தரணி சங்க பிரதிநிதிகளுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது சர்வதேச நாணய நிதியம் தொடர்பான கருத்துககளை ஜனாதிபதி முன்வைத்தார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்கள் வெற்றியளித்துள்ளன என்று தெரிவித்தார்.
மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் அபிவிருத்தி திட்டங்களை மேலும் துரிதப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி இங்கு மேலும் தெரிவித்தார்.