யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் உள்ளிட்ட 17 பேரும் தலா 3 லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனையின் பின்பு நீதிமன்றல் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதேநேரம் கைது செய்யப்பட்ட 17 பேரையும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் யாழ்ப்பாண போலீஸ் நிலையத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை செய்துள்ளார், மேலும் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை சட்டத்தரணிகள் சந்திப்பதற்கும் நடவடிக்கை மேற்கொண்டதுடன் கைதுக்குரிய காரணம் தொடர்பிலும் விசாரணை மேற்ண்டுள்ளர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் ஆஜர்செய்யப்படுவதாக பொலிஸாரால் ஆணைக்குழுவுக்கு தெவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து 11.30 மணியளவில் நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டு அனைவரும் சலீரப் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
TL