சவூதி வெளிவிவகார அமைச்சர் – அமெரிக்க இராஜாங்க செயலாளருக்கு இடையில் கலந்துரையாடல்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தின் தற்போதைய நிலைமை குறித்து சவுதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் பைசல் பின் ஃபர்ஹான் மற்றும் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் அன்டனி பிலிங்கன் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தொலைபேசியின் ஊடாக இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் காஸா மோதலை தவிர்த்தல்இ நிலையான போர்நிறுத்தத்தை எட்டுவதன் முக்கியத்துவம் என்பன குறித்து இரு தரப்பும் வலியுறுத்தியுள்ளன.
இஸ்ரேலின் தாக்குதல்களால் மத்திய கிழக்கில் மோதல் ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.