சிறு பிள்ளைகளை அரசியலில் ஈடுபடுத்துவது தவறு – கல்வியமைச்சர்
சிறு பிள்ளைகளை அரசியலில் ஈடுபடுத்துவது முற்றுமுழுதாக தவறானதென கல்வியமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார்.
தேர்தல் இலச்சினைகளை கூறி, இதற்கு புள்ளடியிடுமாறு பிள்ளைகளுக்கு செய்திகளை அனுப்பும் ஆசிரியர்கள் பற்றி பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய தொழிற்சங்கங்கள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதென கல்வியமைச்சர் குறிப்பிட்டார். அவர் இன்று கொழும்பில் இடம்பெற்ற இயலும் ஸ்ரீலங்கா செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றினார்.
பாடசாலை மாணவ, மாணவியரை அரசியலில் ஈடுபடுத்துவது தொடர்பில் கல்வியமைச்சுக்கு முறையிடப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வியமைச்சர் வலியுறுத்தினார்.
முதலாம் ஆறாம், பத்தாம் தரங்களுக்குரிய கல்வி சீர்திருத்தங்கள், எதிர்வரும் ஜனவரி 20ஆம் திகதி புதிய தவணையுடன் ஆரம்பிக்கப்படவுள்ளன. பாடசாலை மாணவர்களுக்கான சகல பாடப்புத்தகங்களும் தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் குறிப்பிட்டார்.