சீனா தனது வருடாந்த பாதுகாப்பு செலவினங்களை இந்த வருடம் ஏழு சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. தேசிய மக்கள் காங்கிரஸ் கூட்டத்தில் இது அறிவிக்கப்பட்டது. ஜனாதிபதி
ஷி ஜின் பிங்கின் மூன்றாவது பதவிக்காலத்தை உறுதி செய்வதற்காக தேசிய மக்கள் காங்கிரஸ் கூடியபோது இது அறிவிக்கப்பட்டது. சீனாவின் பாதுகாப்பு செலவீனம் 225 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். சீனாவை ஒடுக்கவும், கட்டுப்படுத்தவும் வெளிச்சக்திகள் முயற்சிப்பதாக பதவி விலகும் பிரதமர் லீ கெகியாங் இந்தக் கூட்டத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார். அதற்கான இராணுவப் பயிற்சியும் தயார்நிலையும் இருக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.