சுற்றுலா காலத்தை கருத்திற் கொண்டு விசேட பாதுகாப்புத் திட்டம்.
எதிர்வரும் சுற்றுலா காலத்தை இலக்காகக் கொண்டு விசேட வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு வருவதாக பிரதிப் பொலிஸ் மாஅதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு வருகைதரும் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.
சுற்றுலா பயணிகளுக்கு ஏற்படும் இடையூறு, திருட்டு, உடைமை, விபத்து போன்றவை எற்பட்டால் அவை தொடர்பில் அறிவிப்பதற்கு துரித இலக்கம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த இலக்கம் 1997 என்பதாகும்.
இதனிடையே, அறுகம்பேயில் இஸ்ரேலியர்களால் நிர்மாணிக்கப்பட்ட கட்டிடத்தைச் சூழவுள்ள பகுதியில் பெரும்பாலான இஸ்ரேலியர்கள் செல்வது வழக்கம்.
பொத்துவில் பிரதேசத்தில் நீர்சறுக்கு விளையாட்டில் கலந்து கொள்வதற்காக அவர்கள் பெருமளவில் அங்கு செல்கின்றனர்.
இந்த நிலையில், அவர்களுக்கு ஏதேனும் விபத்து ஏற்படக்கூடும் என தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
தற்போது கிழக்கிற்கு பொறுப்பான பொலிஸ் மாஅதிபர் அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளார். பொலிஸார்,
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், கடற்படையினர், புலனாய்வுப் பிரிவினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.