சோளச் செய்கைக்குத் தேவையான விதைகள் கையிருப்பில் உள்ளதாக தெரிவிப்பு
சோளச் செய்கைக்குத் தேவையான கலப்பு விதைகள் போதுமானளவு கையிருப்பில் உள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
ஒரு இலட்சம் ஹெக்டயர் காணியில் பெரும்போகத்தில் சோளச் செய்கை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இதற்காக ஆயிரத்து 200 மெட்ரிக்தொன் கலப்பு செய்யப்பட்ட விதை தேவை. ஆயிரத்து 100 மெட்ரிக் தொன் விதையை தனியார் பிரிவு இறக்குமதி செய்துள்ளது.
மேலும் 150 மெட்ரிக் தொன் விதை உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் தேசிய சோளப் பயிர்ச்செய்கைக்கான இணைப்பாளர் கலாநிதி புத்திக்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.