சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த 9 வயதான ஸீனத்
சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம் மற்றும் பீபல்ஸ் ஹெல்பிங் பீபில்ஸ் பவுண்டேஷன் நிறுவனங்கள் இணைந்து நடத்திய இந்த நிகழ்வின் போது சிறுமி ஸீனத், 3 நிமிடம் 18 நொடிகளில் 140 பெருக்கல் கணக்குகளுக்கு அபகஸ் முறை மூலம் தீர்வெழுதி உலக சாதனை படைத்தார்.
இந்த நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடியில் அமைந்துள்ள மீரா பாலிகா தேசிய பாடசாலையில் நடைபெற்றது.
சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவர் கதிரவன் த.இன்பராசா நிகழ்வைத் தலைமையேற்று நடத்தினார்.
முதன்மை விருந்தினர்களாக காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையின் தலைமை ஆசிரியர் அஷ்ஷெய்க் அல் மன்சூர் மற்றும் ஷிப் அபகஸ் அமைப்பின் இலங்கை நாட்டின் தலைவர் றிஷாட் ரஹீம் போன்றோர் பங்கு கொண்டு உலக சாதனை படைத்த சிறுமியை பாராட்டி சிறப்புரையாற்றினார்கள்.
சோழன் உலக சாதனை படைத்த சிறுமி ஸீனத்திற்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், தங்கப் பதக்கம், நினைவுக் கேடயம், அடையாள அட்டை, போன்றவை வழங்கப்படன