ஜனாதிபதி தேர்தல்: தபால்மூல வாக்களிப்பிற்காக விண்ணப்பிக்க வேண்டிய கால அவகாசம் நாளையுடன் நிறைவு
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தபால்மூல வாக்களிப்பிற்காக விண்ணப்பிக்க வேண்டிய கால அவகாசம் நாளை முடிவடைகிறது.
சகல மாவட்டங்களிலும் தபால் மூலம் வாக்களிக்க விரும்பும் விண்ணப்பதாரிகள் விண்ணப்பங்களை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த விண்ணப்பங்களை மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள், கிராம உத்தியோகத்தர்கள் அலுவலகங்கள் ஆகியவற்றில் பெறலாம்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.