ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்கத் தீர்மானித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி
நாட்டின் நலனைக் கருத்திற்கொண்டு ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்ததாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவர் அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளார்.
கட்சியின் சகல குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்தத் தீர்மானம் மேற்கொண்டதாக அவர் கூறினார்.
கட்சியின் அடையாளத்தைப் பாதுகாத்துக்கொண்டு ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு சகலரும் உடன்பாட்டிற்கு வந்திருப்பதாகவும் அமைச்சர்; குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிபுணர்கள் குழு தயாரித்த கோரிக்கைகள் அடங்கிய பிரேரணை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.