ஜனாதிபதித் தேர்தலுக்கான ஊடக வழிகாட்டல் வெளியீடு.
ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய ஊடக வழிகாட்டுதல்களை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இது பற்றிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுடன் சம்பந்தப்பட்ட செய்தி அறிக்கையிடல், நிகழ்ச்சிகள், அரசியல் நிகழ்ச்சிகள் பற்றிய வழிகாட்டல்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
ஊடக வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்துவதற்கும் சிபார்சுகளை முன்வைப்பதற்கும் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அச்சு, இலத்திரனியல் ஊடகங்கள்;, இணையத் தளங்கள், சமூக ஊடகங்கள் என வெவ்வேறாக இந்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதேவேளை, பொலிஸ் மா அதிபர் இன்மை, தேர்தலில் ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றிய பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.கே.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பொலிஸ்மா அதிபரின் அதிகாரம் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அவருக்கும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
நீதியானதும் நேர்மையானதுமான தேர்தலை நடத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி இந்தப் பேச்சுவார்த்தையின்போது கவனம் செலுத்தப்பட்டது.