ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் 9 நாட்கள் உள்ளன
ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே எஞ்சியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 183 தேர்தல் தொடர்பான முறைபாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 3 தேர்தல் வன்முறைகள் பதிவாகியுள்ளன. சட்ட மீறல்கள் தொடர்பாக 177 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
கடந்த ஜூலை மாதம் 31ஆம் திகதி முதல் இதுவரையில் பதிவான மொத்த முறைபாடுகளின் எண்ணிக்கை 3406 ஆகும். 2638 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மேலும் 768 முறைபாடுகள் தொடர்பில் தேர்தல் திணைக்களம் ஆராய்ந்து வருகிறது.
இதேவேளை, 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள எல்பிட்டிய பிரதேச சபைக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக இதுவரையில் 10 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அத்துடன் 2 சுயேச்சைக் குழுக்களும் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.