ஜனாதிபதித் தேர்தல்: வர்த்தமானி அறிவித்தலை அரச நிறுவனங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும்
மாவட்டத் தெரிவத்தாட்சி அதிகாரிகள், உதவித் தேர்தல் ஆணையாளர்கள் ஆகியோர் விரைவில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரை சந்திக்கவுள்ளார்கள்.
இந்த சந்திப்பு எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாட்டில் இதுவரை தேர்தல் சட்டங்கள் மீறப்பட்டமை பற்றிய 125 சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன.
ஜனாதிபதித் தேர்தல் பற்றி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, அரச நிறுவனங்கள் செயற்பட வேண்டும். அரச வளங்களை முறைகேடாக பயன்படுத்தல் நியமனங்களை வழங்கல், இடமாற்றங்களை மேற்கொள்ளல் என்பனவும் தடை செய்யப்பட்டிருக்கின்றன.
ஊடகங்களுக்கான வழிகாட்டல் கோவையும் விரைவில் வெளியிடப்படவிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். இதனை மீறிச் செயற்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதேவேளை, அரச சொத்துக்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டமை பற்றிய முறைப்பாடுகள் தமக்குக் கிடைத்திருப்பதாக பெஃபரல் அமைப்பு அறிவித்துள்ளது.