டிக்டொக்(TikTok) செயலியை தடை செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கும் சட்டமூலத்திற்கு அமெரிக்க பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதன்பிரகாரம் அமெரிக்காவின் அரச நிறுவனங்களின் மின்னணு சாதனங்களில் இருந்து டிக்டொக் செயலியை நீக்குவதற்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிலவுவதாக தெரிவித்து, ஐரோப்பிய நாடுகள் பல டிக்டொக் செயலியின் பயன்பாட்டை தவிர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.