டிசம்பருக்குப் பிறகு இலங்கைக்கு ஆபத்தான நிலைமை; மஹிந்த அமரவீர எச்சரிக்கை
எதிர்வரும் காலத்தில் நாட்டில் கடுமையான வரட்சி ஏற்படக்கூடும் என சர்வதேச வானிலை முன்னறிவிப்புக்கள் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
அதனால் பயிர்கள் பயிரிட முடியாத அளவுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
இந்த நாட்களில் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் மழை பெய்தாலும் கடந்த காலத்தை விட விவசாயிகள் கடும் வறட்சியை சந்திக்க நேரிடும் என அமைச்சர் வலியுறுத்தினார்.
நீர்த்தேக்கங்களில் தேங்கியுள்ள நீரை விவசாயிகள் மிகவும் சிக்கனமாக பயன்படுத்துமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
டிசம்பர் இறுதிக்குள் ‘லா நினா’ (La Nina) எனப்படும் இயற்கையான காலநிலை நிலவும் என சர்வதேச நிறுவனங்கள் கணித்துள்ளதாகவும், எனவே நீரை சுத்தப்படுத்துவது மிகவும் அவசியம் எனவும் அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.