Home » தடகள செம்பியன்ஷிப் போட்டியில் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம்

தடகள செம்பியன்ஷிப் போட்டியில் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம்

Source

சுவீடனில் நடைபெற்ற உலக மாஸ்டர்ஸ் தடகள செம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையை சேர்ந்த சச்சித்ரா ஹர்ஷனி ஜயகாந்த வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

40 முதல் 44 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் அவர் அந்த திறமையை வெளிப்படுத்தினார். இதன்போது அவர் 5.24 மீட்டர் நீளம் தாண்டி இந்த பதக்கத்தை வென்றுள்ளார்.

உலக மாஸ்டர்ஸ் தடகள செம்பியன்ஷிப் போட்டியில் 119 நாடுகளைச் சேர்ந்த வீர, வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இலங்கையை பிரதிநித்துவப்படுத்தி 14 பேர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment